தமிழக சட்டசபையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:
FCRA விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி, சிறுபான்மையினர் கல்வி நிறுவன செயல்பாட்டை பாதிக்கும்.
மத, கல்வி, மருத்துவ, சமூக அமைப்புகள், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்தவேண்டும்.
FCRA திருத்த சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர்.
FCRA மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
FCRA திருத்த மசோதாவிற்கு எதிராக தவெக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.
மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபணை தெரிவிக்கிறது என தெரிவித்தார்.
இந்த தீர்மானம் தொடர்பாக தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
இன்று 2 முக்கியமான தீர்மானங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு தேமுதிக சார்பில் நன்றி.
நேரலையில் பேரவை நிகழ்வை காண்பிக்க வேண்டுமென கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை வைத்த நிலையில் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து நேற்று இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் தேமுதிக சார்பில் ஆதரவு.
தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காதவர், கேப்டன் விஜயகாந்த் தமிழ் மொழி மட்டுமே பேசினார்.
இலங்கைவாழ் தமிழர்களுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து உரித்தாகும்.
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு.
நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் இறுதிச்சடங்கில் தகனமேடைக்கு அருகே நின்று அஞ்சலி செலுத்தினார் கேப்டன்.
FCRA பணம் புறவாசல் வழியாக வந்துவிடாமல் தவெக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தவறான வழியில் தமிழகத்தில் நுழையும் பணத்தை கட்டுப்படுத்துவதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.