தமிழக செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

பள்ளிகளில் போக்சோ சட்டங்கள் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

* வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம்.

* வானிலை மையத்தின் அறிக்கை அடிப்படையில் முதலமைச்சரிடம் ஆலோசித்த பின் பள்ளி திறப்பு தேதி குறித்து அறிவிப்போம்.

* பள்ளிகளில் போக்சோ சட்டங்கள் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

* பள்ளிகள் திறந்ததும் காலை உணவு திட்டம் தொடரும்.

* காலை உணவு, மதிய உணவு உள்ளிட்ட திட்டங்கள் இந்த ஆட்சியில் மேம்படுத்தப்பட்டு தொடரும்.

* மாணவர்கள் சம்பந்தப்பட்ட எந்த திட்டத்தையும் நிறுத்த மாட்டோம்.

* பள்ளி மாணவர்களுக்கான உணவு தரமாக இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* எங்களுடைய கொள்கை இரு மொழி கொள்கைதான். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

* பள்ளி மாணவர்கள் இடையே சாதிய மோதலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.