அமைச்சர் ராஜ்மோகன்
தமிழக செய்திகள்

நான் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை 50,500 டாலரா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

ராஜ்மோகன் அணிந்திருக்கும் கடிகாரம் மற்றும் தங்க காப்பு குறித்து செய்திகள் வெளியானது.

அமைச்சர் ராஜ்மோகன் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை 50,500 டாலர் என சமூக வலைத்தளத்தில் செய்தி பரப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் ராஜ்மோகன் தனது எக்ஸ்பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-

எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே.

கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன் குறித்து பொய் பரப்பி இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல.

உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும் தனிப்பட்ட இழிவு படுத்தல்களிலும் ஈடுபடும் fake news factories கூட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன்.

இவ்வாறு ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT