சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் எங்கும் போதைப்பொருள் உற்பத்தி நடைபெறவில்லை. குஜராத்தில் இருந்துதான் வருகிறது.
* பள்ளி, கல்லூரிக்கு அருகில் போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
* அ.தி.மு.க.வை விட சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டு மக்கள் பாதுகாப்போடு இருக்கிறார்கள்.
* 80 சதவீத பெண்கள் தி.மு.க. கூட்டணிக்கு தான் வாக்களிக்க போகிறார்கள் என்ற தகவல் வருகிறது.
* அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஆட்சியைவிட சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்பட்டு மக்கள் பாதுகாப்போடு உள்ளனர்.
* பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற போலி நாடகத்தை உருவாக்க மத்திய அரசும், இ.பி.எஸ்.ம் உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
* தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையின் காரணமாக குற்றங்கள் குறித்து பெண்கள் அதிகளவில் புகாரளிக்க முன்வருகின்றனர்.
* தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசை.
* எடப்பாடி பழனிசாமியையோ அவரது கொள்கைகளையோ தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்ப தயாராக இல்லை.
* தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.