மின் வாரியத்தில் ஊழியர் தட்டுப்பாடு பெருமளவில் உள்ளது. டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* சென்னையில் சுமார் 600 முதல் 1,000 மின் மாற்றிகளை புதிதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* தாழ்வான பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள், சற்று உயரமான இடங்களில் பொருத்தப்படும்.
* மின் வாரியத்தில் ஊழியர் தட்டுப்பாடு பெருமளவில் உள்ளது. டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது.
* மின்வாரியத்தில் 2,600 ஊழியர்கள் தேர்வு, கூடுதலாக 2,400 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
* மீட்டர் ரீடிங் எடுப்பதற்கு குறைந்த பணியாளர்கள் உள்ளதால் கூடுதலாக 5,000 பணியாளர்கள் நியமிக்க உள்ளோம்.
* டெண்டர் மூலமே பணியாளர்களை மின்வாரியம் மூலம் தேர்வு செய்து வருகிறோம்.
* ஸ்மார்ட் மீட்டர் திட்டம் இரண்டரை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* புதுவண்ணாரப்பேட்டையில் 3 நாட்கள் மின்தடை என்று திமுகவினர் கூறுவது தவறான தகவல்.
இவ்வாறு அவர் கூறினார்.