மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசித்த பின்னர் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
* சட்டம் ஒழுங்கு குறித்து நாள்தோறும் முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.
* ஒவ்வொரு துறை ரீதியாகவும் முதலமைச்சர் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
* கடந்த 50 ஆண்டுகளாக புரையோடிப்போயுள்ள துறைகளை முதலமைச்சர் தீவிரமாக ஆராய்கிறார்.
* தவெக வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.