அமைச்சர் நிர்மல்குமார் 
தமிழக செய்திகள்

சட்டசபையில் இன்றும் எதிரொலித்த சர்காரியா அறிக்கை- மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை- அமைச்சர் நிர்மல்குமார்

பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார்.

மு.க.ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று பொதுத்துறை, போக்குவரத்து துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக, சர்க்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது தொடர்பாக திமுக கொறடா எ.வ.வேலு பேசினார். அப்போது எ.வ.வேலு பேசியதாவது:-

* பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார். அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார்.

* நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.

* நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.

* அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.

* ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின்.

* பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார்.

* நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது.

* கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது.

* குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது.

* சர்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கம் வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது:-

* விசாரணையையோ நீதிமன்றத்தை பற்றியோ நேற்று முதலமைச்சர் விஜய் பேசவில்லை.

* கலைஞர் எங்கெங்கு எல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்காரியா கமிஷனில் உள்ளது.

* திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம், அது எல்லாம் மிசா வழக்கு ஆகாது.

* முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் தொடர்பான வழக்கிற்கு தான் கைது.

* 21-வது அம்ச திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது என்றார்.

மு.க.ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.

SCROLL FOR NEXT