மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல் குமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.வில் தலைமை திறமை இல்லாமல் உள்ளது. தலைமை என்ன செய்யப் போகிறது என்பதே அக்கட்சியின் தொண்டர்களுக்கு தெரியவில்லை. இன்னும் சிறிது நாளில் பார்த்தால் எடப்பாடி பழனிசாமியே தி.மு.க.வில் சேர்ந்து விடுவார். ஒரு கேபினட் அமைச்சர் பதவி கொடுத்தால் பா.ஜ.க.விலும், ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்தால் தி.மு.க.விலும் இணையும் நிலைக்கு அவர் சென்றிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமியை அவர் விமர்சித்தார்.