தமிழக செய்திகள்

இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி - அமைச்சர் நிர்மல்குமார்

மிசாவில் கைதானதற்கான ஆதாரமே இல்லாத ஒரே தியாகி ஸ்டாலின்தான்.

திருமங்கலம் பார்முலாவை போல் திமுக பல கோடி கொடுத்தாலும் மக்கள் அதை வாங்கிக்கொண்டு தெளிவாக வாக்களிப்பர் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

மதுரையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மிசாவில் மு.க.ஸ்டாலின் கைதானார் என்பதற்கான ஆதாரம் இல்லை.

* மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்பதற்கு தன்னிடம் ஆதாரமுள்ளது.

* மிசா குறித்து மீண்டும் மீண்டும் பேசினால் திமுகவுக்கு தான் அழிவு ஏற்படும்.

* மிசாவில் கைதானதற்கான ஆதாரமே இல்லாத ஒரே தியாகி ஸ்டாலின்தான்.

* மிசா சட்டத்தில்தான் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்றால் Detention Copy அழிக்கப்பட்டது ஏன்?

* திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஸ்டாலின் கைது குறித்த Detention Copy அழிக்கப்பட்டது.

* மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தியாகி என்று திமுக சித்தரிக்க முயன்றாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள்.

* மதுராந்தகத்துக்கும் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கும் என்ன சம்பந்தம்?

* மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியி எழும்பூரை சேர்ந்த பரந்தாமனை நியமிப்பதால் என்ன பயன்?

* இடைத்தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது.

* வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பை வழங்கிய திருமங்கலம் பார்முலாவை திமுக செய்தாலும் பயனில்லை.

* திருமங்கலம் பார்முலாவை போல் திமுக பல கோடி கொடுத்தாலும் மக்கள் அதை வாங்கிக்கொண்டு தெளிவாக வாக்களிப்பர்.

* திமுக நடத்தும் போராட்டத்தை பார்த்து மக்கள் சிரித்தவாறே கடந்து செல்வர்.

* இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT