அமைச்சர் நிர்மல்குமார் 
தமிழக செய்திகள்

கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: அமைச்சரின் விளக்கமும்... தி.மு.க. எதிர்ப்பும்

3 தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல, விசாரணை தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். இதைதொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

* தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 3 பேர் வனத்துறையால் சுட்டுக்கொலை, ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* ஆக.12-ல் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்தது.

* உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

* இடைக்கால நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கிய கர்நாடக அரசு விசாரணைக்கு பின் கூடுதல் நிவாரணம் தருவதாக கூறியுள்ளது.

* கர்நாடக வனத்துறை நடத்தியது படுகொலை என குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்தார்.

* 3 தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல, விசாரணை தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார்.

*ஒரு சிலருக்கு திடீரென தமிழ் பாசம் தமிழர் பாசம் இருக்கும் என்றார்.

அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், யாருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக அமைச்சர் இதுபோன்று பேசுகிறார் எனத் தெரியவில்லை. கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான அமைச்சரின் பதில் மட்டுமே அவைக்குறிப்பில் இருக்கும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT