தமிழக செய்திகள்

மாரத்தான் ஓட்டத்தில் 6 கி.மீ. இலக்கை நிறைவு செய்த அமைச்சர் என்.ஆனந்த்

மாணவ-மாணவிகள், துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் அமைச்சர் என்.ஆனந்துடன் ஆர்வத்தோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் நடந்த விழிப்புணர்வு ஓட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து மாரத்தானில் ஓடினார்.

விழிப்புணர்வு ஓட்டத்தில் அமைச்சர் என்.ஆனந்தும் பங்கேற்று ஓடியதுடன் மாரத்தானில் 6 கி.மீ. தூர இலக்கை நிறைவு செய்தார். இதற்காக அவருக்கு பதக்கம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ஓட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், இளைஞர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் உணவுகளை அமைச்சர் என்.ஆனந்த் வழங்கினார்.

இதை தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுடன் தரையில் அமர்ந்து அவர்களுடன் கலந்துரையாடி போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் போதைப்பொருட்களுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி கூறினார்.

இதை தொடர்ந்து மாணவ-மாணவிகள், துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் அமைச்சர் என்.ஆனந்துடன் ஆர்வத்தோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், மக்களுக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்பவர் தான் நமது முதலமைச்சர். இளைஞர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது தமிழக அரசின் வேண்டுகோள்.

போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் எடுத்து வருகிறார். போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை நிச்சயம் முதலமைச்சர் விஜய் உருவாக்குவார்.

இவ்வாறு அவர் கூறினார்.