தமிழ்நாடு செய்திகள்

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை காலமானார்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சராக உள்ளவர் மு.பெ. சாமிநாதன். அமைச்சரின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மாலை மலர்

திருப்பூர்:

தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை சா.பெருமாள் சாமி கவுண்டர் காலமானார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சராக உள்ளவர் மு.பெ. சாமிநாதன். இவர் திருப்பூர் மாவட்டம் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை சா. பெருமாள் சாமி கவுண்டர் (94). தாயார் தங்கமணி. இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தாயார் தங்கமணி இறந்தார்.

இதற்கிடையே சா.பெருமாள் சாமி கவுண்டர் வயது மூப்பு காரணமாக கடந்த 3 நாட்களாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.50 மணி அளவில் இறந்தார். அமைச்சரின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.