அமைச்சர் மு.பெ.சாமிநாதன். 
தமிழக செய்திகள்

அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா- கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி

கொரோனா பரிசோதனை செய்ததில் அமைச்சருக்கு தொற்று உறுதியானது.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக செய்தித்துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள்  தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.