தமிழக செய்திகள்

தலைமைச் செயலகத்தில் நிதித்துறை செயலாளருடன் அமைச்சர் மரிய வில்சன் ஆலோசனை

கடந்த மாதம் 10-ந்தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற த.வெ.க. தலைவர் விஜய் அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் மற்றும் நிதித்துறை செயலர் சித்திக் ஆகியோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வெள்ளை அறிக்கை தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன், நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு பணிகள் நடைபெற்றுள்ளது. இதற்காக நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது? ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு கடன் வாங்கப்பட்டுள்ளது? போன்ற விவரங்கள் குறித்து விரிவாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த மாதம் 10-ந்தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற த.வெ.க. தலைவர் விஜய் அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT