முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அவர் செய்த செயல் என்ன? கல்வியில் ஊழல்... 300, 400 கோடி ரூபாய். ஆனால், அவர்கள் அங்கு கேட்பது சாப்பாடு சரியில்லை என்று.
'நான் இதை செய்யவில்லை’ என்று மனுவில் கூறியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால், சாப்பாடு சரியில்லை என்றெல்லாம் அன்பில் மகேஷ் ஜாமீன் கோருவதா? இதெல்லாம் ஒரு விஷயமா?
ஸ்டாலின் போன்ற முதிர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த தலைவர் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது எதிர்பாராதது. ஒரு தலைவரே இப்படி பேசினால், கீழ்மட்டத் தலைவர்கள் இதைவிட மோசமாகத்தான் பேசுவார்கள்.
முன்னாள் முதல்வர் இப்படி பேசுவதை மக்களை இழிவுபடுத்தும் செயலாகவே நான் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.