கோவை சிறுமி கொலை வழக்கு தொடர்பான கேள்வியின் போது அமைச்சர் கீர்த்தனா சிரித்ததாக சர்ச்சையான நிலையில் அது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
இயல்பாக நான் சிரித்தேன். அது எந்தக் கேள்விக்கும் அல்லது சம்பவத்திற்கும் எதிரான பிரதிபலிப்பல்ல. ஆனால் அந்த உடல்மொழியை தவறாகப் புரிந்து கொண்டு அரசியல் நோக்கில் திரித்து பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது.
எதிர்க்கட்சியை விமர்சிப்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் உண்மைகளை திரித்து ஒருவரின் தனிப்பட்ட தருணங்களையே அரசியல் ஆயுதமாக மாற்றுவது சமூகத்திற்கு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.
சிறுமிக்கு நிகழ்ந்த கொடுஞ்செயல் மிகுந்த வேதனையளிக்கிறது, குற்றவாளிகள் 24மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். ஒரு குழந்தைக்கான நீதியும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் தான் இந்த அரசின் முதல் முன்னுரிமை.
தமிழ்நாடு அரசு மக்கள் பாதுகாப்பிலும், நீதியிலும் எந்த சமரசமும் செய்யாது என்றார்.