தமிழக செய்திகள்

தமிழக சட்டசபையில் தினத்தந்தியைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா

100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என்றார்.

தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்த தினத்தந்திக்கு பாராட்டு தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், தொழில் முதலீடுகள் குறைந்துள்ளதாக ஆஸ்டின் பேசியது தவறான தகவல். 100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

காசு கொடுத்தால் எதையும் எழுதும் பத்திரிகை என தனியார் பத்திரிகை ஒன்றை குறிப்பிட்டார் அமைச்சர் கீர்த்தனா.

காசு கொடுத்தால் பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவார்கள் என கூறக்கூடாது என திமுக கொறடா எ.வ.வேலு தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நிர்மல்குமார், அமைச்சர் கீர்த்தனா ஒரு சில பத்திரிகைகளை தான் கூறி உள்ளார் என்றார்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடு மாநாட்டை முதலில் நடத்தியது ஜெயலலிதா என அதிமுக உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, நான் குறிப்பிட்ட பத்திரிகை ஒரு பத்திரிகைகூட கிடையாது. அது ஒரு வெப்சைட். பிரைவேட் வெப்சைட். அதே பத்திரிகையாளர்கள் தான் தினத்தந்தியில் நம்மை பற்றி, நம்முடைய தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்தார்கள்.

அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து இங்கே பேசி பெருமைப்பட்டு இருந்தால், தமிழ்நாடு முன்னேறுகிறது என்று பேசி இருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.