கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை நன்றாக இருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
அமைச்சர் அருண்ராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். மருத்துவ பணியாளர்களுடன் முதலமைச்சரும், துறை சார்ந்த அதிகாரிகளும் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தை முடிந்த 5 நாட்களில் போராட்டம் நடத்துவது நியாயம் இல்லை.
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை நன்றாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.