தமிழக செய்திகள்

பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

ஜேஇஇ, பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும்.ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

மாலை மலர்

சென்னை:

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தீபாவளிக்குப் பின் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.

ஜேஇஇ, பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும்.

ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவித்தார்.