அமைச்சர் என்.ஆனந்த் 
தமிழக செய்திகள்

25 ஆண்டுகள் ஆனாலும் முதலமைச்சராக விஜய்தான் இருப்பார்- அமைச்சர் என்.ஆனந்த் பேச்சு

தீய சக்திகள் அத்தனை சதிகளையும் பண்ணும். அதை எல்லாவற்றையும் தாண்டி வந்து வெற்றி பெறுவோம். கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் முதலமைச்சர் விஜய்யும் தமிழக வெற்றி கழகத்தினரும் உரிய மரியாதையை எப்போதும் அளிப்போம்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 25 ஆண்டுகள் கடந்தாலும் முதலமைச்சராக தொடர்வார் என அமைச்சர் என். ஆனந்த் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உறுதியாக தெரிவித்தார். கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எப்போதும் மரியாதை அளிக்கப்படும் என்றும், தீய சக்திகளின் சதிகளை தாண்டி வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.

மதுராந்தகம் தொகுதி த.வெ.க வேட்பாளராக மரகதம் குமரவேலுவை ஆதரித்து மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது.

அமைச்சர் என்.ஆனந்த்

கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் பேசியதாவது:-

இந்த மேடையை பார்த்தாலே சந்தோஷமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு ஊழலும் செய்யாத ஒரு நல்ல தலைவர்கள் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். அதற்கு யார் சாத்தியம் என்றால் முதலமைச்சர் விஜய் மட்டுமே சாத்தியம். மாணிக்கம்தாகூர் எளிமையான தலைவர். திருமாவளவன் எங்களுடன் இருப்பது பெரிய பலம். வைகோ மற்றும் ஆளுமையான தலைவர்கள் இருக்கும் இடத்தில் நான் பேசுவதற்கு வாய்ப்பளித்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி. சட்டமன்ற உறுப்பினர் பதவி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் போகும். தளபதி ரசிகர் என்ற பதவி கடைசி வரை இருக்கும். இந்த மேடையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் கலந்து பேசி முடிவெடுக்கக் கூடிய தலைவராக முதலமைச்சர் விஜய் இருக்கிறார்.

25 ஆண்டுகள்

இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் முதலமைச்சராக இருப்பார். அவருக்கு உறுதுணையாக இங்கு இருக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள் எப்போதும் இருப்பார்கள். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். தீய சக்திகள் அத்தனை சதிகளையும் பண்ணும். அதை எல்லாவற்றையும் தாண்டி வந்து வெற்றி பெறுவோம். கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் முதலமைச்சர் விஜய்யும் தமிழக வெற்றி கழகத்தினரும் உரிய மரியாதையை எப்போதும் அளிப்போம். மரகதம் குமரவேல் இந்த தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT