முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.400 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இது அரசியல் பழிவாங்கல் அல்ல என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். தி.மு.க. அரசின் செயல்பாடுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் என அவர் கூறினார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
சமூக நீதி மதசார்பின்மை என அரசியல் ரீதியாக பேசி விட்டு மக்கள் அதை நம்பி ஓட்டு போடும்போது அமைச்சர் ஆனவுடன் வளமான துறை எது என்பதுதான். முந்தைய ஆட்சி அமைச்சர்களின் விவாதமாக இருந்தது. பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித் துறை ரூ.30 ஆயிரம் கோடி, 40 ஆயிரம் கோடி பட்ஜெட் ஒதுக்கப்படும்போது அதில் ரூ.10 சதவீதம் எடுத்து விட்டாலே ரூ.3 ஆயிரம் கோடி. பா.ஜ.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்த அரச குமாருக்கு ஒரு பதவியை கொடுத்துவிட்டு அவரை கலெக்ஷன் பண்ணும் ஏஜெண்டாக மாற்றி விட்டார்கள். கலெக்ஷன் பணம் அமைச்சர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் சென்றுள்ளது. இவை அனைத்தையும் நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.
யாரையும் பழிவாங்கக் கூடிய அவசியம் இல்லை. அன்பில் மகேஷை கைது பண்ணினால் திருச்சியில் அவர் சொன்னால் 10 எம்.எல்.ஏ. ஜெயிக்கிற கதையெல்லாம் கிடையாது. அவரே திருவெறும்பூரில் தோற்றுள்ளார்.
தோல்வியுற்றவரை கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கல் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.