அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
* காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்புகிறார்.
* சமூகநீதி அடிப்படையில் இயங்கும் கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும்.
* அமைச்சரவையில் இடம் பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அழைக்கிறோம்.
* இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கும் அமைச்சரவையில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* தமிழக வெற்றிக்கழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.