உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் 25 மாநகராட்சிகளிலும் நாங்கள் வெற்றி பெறும்போது, மேயர்களும், எல்லா தலைவர்களும் மாறும்போது எல்லா ஆதாரங்களும் வெளிவரும் என்பதை பதிவு செய்கிறோம் என்றார்.
தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக தவெக எம்எல்ஏ தங்கப்பாண்டி குற்றச்சாட்டினார்.
இதற்கு திமுக எம்எல்ஏ கே.என் நேரு பதிலளிக்கையில், ஒவ்வொரு ஆட்சியிலும் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் கூட ரூ.5000 கோடி செலவில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 30 ஆண்டுகளுக்கு தேவையான தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா பணிகளும் செய்யப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் எல்லோரும் சொல்கிறார்கள், முந்தைய தி.மு.க. ஆட்சியில் ஊழல்... ஊழல் என்று. ஊழல் இருந்தால் அதிகாரம் உங்க கிட்ட இருக்கு. அதைக் கண்டுபிடிங்க. செய்யுங்க. எடுத்த உடனே ஊழல், ஊழல் என்றால் அது எப்படி? அது சரியாக இருக்காது என்றார்.
நமக்கான பிரச்சனையை சொல்றேன். நகராட்சி துறையில் திட்டங்கள் தீட்டி விட்டோம். ரூ.5 ஆயிரம் கோடிக்கான திட்டத்தை போட்டாச்சு.எல்லாம் போட்டுட்டும். ஆனால் இன்றைக்கும் நம்முடைய தாய்குலமான பெண்கள் குடத்தை தூக்கிட்டு லாரிக்காக ஒவ்வொரு ரோட்டிலும் வெய்ட் பண்ணிட்டு தான் இருக்காங்க. ஒவ்வொரு ஊரிலும் தாய்மார்கள் தண்ணீருக்காக வெய்ட் பண்ணிட்டுதான் இருக்காங்க.
எதிர்க்கட்சி துணை தலைவர் அண்ணா நீங்க பனையூர் சொன்னா, நாங்க கோபாலபுரம்-ன்னு பேச வருவோம். நாங்க அதைப்பற்றி பேச வரலை. மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச வந்திருக்கோம். தண்ணீர் இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் குழாயில் கொண்டு சென்று சேர்க்க முடியாத அரசாக இருக்கோம். ஒவ்வொரு பிரச்சனையையும் சட்டமன்ற உறுப்பினர் சொல்லும் போது ஆதாரம் இருக்கா, ஆதாரம் இருக்கா என்று கேட்கிறார். இன்றைக்கு அரசினுடைய பிரச்சனை என்று சொல்கிறேன்.
உள்ளாட்சி துறை இன்றைக்கும் உங்களுடைய கன்ட்ரோலில்தான் இருக்கு. உங்களுடைய மேயர்தான், உங்களுடைய மண்டல பொறுப்பாளர்கள்தான். 25 மாநகராட்சி உங்கக்கிட்ட தான் இருக்கு. நாங்கள் திட்டத்திற்கு நிதி ஒதுக்கினால் அதனை செயல்படுத்தும் இடத்தில் திமுகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தான் உள்ளனர். இந்த அரசு மாறிவிட்டது, அதிகாரம் மாறிவிட்டது, ஆனால் உள்ளாட்சி துறையில் இன்னும் அதிகாரம் மாறாததால் தான் இந்த அரசுடன் மேயர்களுடன், மண்டல பொறுப்பாளர்கள் இணைந்து செயல்படுவதில்லை. சென்னையில் இருக்கிற மேயர் இந்த அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை. குற்றச்சாட்டை மட்டும் தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. எங்களுடைய கோரிக்கை குற்றச்சாட்டை தூக்கி எறிவோம். இன்னும் 6 மாதங்கள் தான் இருக்கு உள்ளாட்சி தேர்தலுக்கு. இந்த தேர்தலில் 90 சதவீதம் இல்ல 100 சதவீதம் நாங்கள்தான் ஜெயிக்கப்போறோம். அதை இங்க பதிவு செய்கிறோம். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் 25 மாநகராட்சிகளிலும் நாங்கள் வெற்றி பெறும்போது, மேயர்களும், எல்லா தலைவர்களும் மாறும்போது எல்லா ஆதாரங்களும் வெளிவரும் என்பதை பதிவு செய்கிறோம் என்றார்.
கிட்டத்தட்ட 2500 எம்எல்டி கொடுத்த இடத்தில் 4 ஆயிரம் எம்எல்டி புதிய திட்டங்கள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. புதிய ஆட்சி அமைந்த பின் நிதி ஒதுக்கீடு நிறுத்தம், மாநகராட்சிகளில் எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை. நிதி ஒதுக்கியதாக கூறுவது தவறு, சென்னை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கவில்லை என கருப்பு உடை அணிந்து வந்தனர். மாநகராட்சி மேயர்கள் திமுகவினர் என்றாலும் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது, ஆட்சி அதிகாரம் உங்களிடத்தில் உள்ளது. உங்களுடைய செயலாளரை அழைத்து எந்தெந்த திட்டத்தில் எல்லாம் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை கேளுங்கள். கேட்டு உடனே நடத்தச் சொல்லுங்கள். கவுன்சிலரோ, மேயரோ அரசு சொல்கிற ஒரு திட்டத்தை செயல்படுத்தத்தவறினால் ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. ஆணையரே அத்திட்டத்தை செயல்படுத்த சொல்லலாம் என்றார்.