புலன் விசாரணை நடைபெறுவதால தான் உயிரிழந்த மீனவர்கள் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனவர் மாவீரனின் உடலை தாயம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதும் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்தது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* சவுதியில் ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் உயிரிழந்தார்.
* உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சவுதியின் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
* காசிமேடு மீனவர்கள் 80 பேர் சிறையில் அடைப்பு, அவர்களின் படகுகளை ஆந்திர அரசு பறிமுதல் செய்துள்ளது என்றார்.
இதற்கிடையே பேசிய சபாநாயகர், சிறப்பு கவன ஈர்ப்பு தந்தாலும் அமைச்சர் தரப்பில் பதில் வந்தால் தான் விவாதம் நடைபெறும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதை பதிவு செய்வது வழக்கம் தான் என்றார்.
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ எ.வ.வேலு பேசுகையில், அவசரம் கருதி எடுக்கப்படும் பிரச்சனைகளுக்கு 15 நாட்கள் கழித்து பதில் வந்தால் எப்படி? அவசரம் என்பதால் தான் சிறப்பு தீர்மானம் கொண்டு வருகிறோம் என்றார்.
அதற்கு, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பதிவு செய்ய மட்டும் அனுமதி தருகிறேன், பதில் வந்த பின் விவாதம் நடத்தலாம் என சபாநாயகர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து எம்எல்ஏ சிவக்குமார் பேசுகையில், மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் ஈரான் துப்பாக்கிச்சூட்டில் பலி அரசு நடவடிக்கை எடுத்து மானியம் தரவேண்டும் என்றார்.
சவுதி தாக்குதலில் ஒரு மீனவர் பலி, 3 பேர் படுகாயம், இலங்கை கடற்படையும் மீனவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழர்கள் மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
சவுதி அரேபியாவில் 10-ந்தேதி ஈரானிய கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் தமிழக மீனவர் பலியாகி உள்ளார். புலன் விசாரணை நடைபெறுவதால தான் உயிரிழந்த மீனவர்கள் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனவர் மாவீரனின் உடலை தாயம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.