தமிழக செய்திகள்

ரூ.400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலை துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:

சென்னை- கோவை - தூத்துக்குடியை இணைக்கும் தொழில் தட விரைவு சாலை உருவாக்கப்படும்.

சென்னை கன்னியாகுமரி 8 வழிச்சாலை, சென்னை நுழைவு வழித்தடச் சந்திப்புகளை மேம்படுத்துதல், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு உயர்மட்ட சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரியை இணைக்கும் கடல்வழி உயர்மட்ட சாலைத் தொடர், மும்பை - நவி மும்பை கடல் இணைப்புச் சாலை போல் கட்டம் கட்டமாக உருவாக்கப்படும்.

வெற்றி சட்டமன்ற உறுப்பினர் சாலை மேம்பாட்டுத் திட்டம்.

நம்ம சாலை செயலி மேம்பாட்டை உள்ளடக்கிய சீரான சாலைகள் திட்டம் ரூ.250 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கடல்வழிப் பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையின் கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திருவிக பாலம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும்,

வடசென்னையில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, வியாசர்பாடியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.500 கோடியில் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு குழு செயல்படுத்தப்படும்.

சென்னை-புதுவை இடையே படகு போக்குவரத்து

கடுமையாகும் சாலை விதிகள்

சாலை விபத்துகளைத் தடுக்க அடுத்த ஆண்டு முதல் சாலை விதிகள் மேலும் கடுமையாக்கப்படும்.

நெடுஞ்சாலைகளில் பேட்ச் ஒர்க்கிற்கு மட்டும் அதிக செலவு செய்யப்படுகிறது. அதில் அதிக ஊழலும் நடந்துள்ளது.

ரூ. 400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை

45,000 கிலோ மீட்டர் சாலைகள் இருவழிப் பாதையாக மாற்றப்படும்.

பாம்பன் டூ அக்னி தீர்த்தம் வரை உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து சேவை

நாகை - காங்கேசன்துரை இடையிலான படகு போக்குவரத்து விரிவுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.