தமிழக செய்திகள்

கனிமவள கடத்தல் கும்பலுக்கு போலி அனுமதி சீட்டு அச்சடித்து கொடுத்த அச்சக ஊழியர்கள் 2 பேர் கைது

போலி அனுமதி பாஸ் தயாரிப்பில் ஈடுபட்ட அச்சக ஊழியர்களான மணிகண்டன், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

தலைமறைவான அச்சக உரிமையாளரை தேடி வருகின்றனர். இதில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து பிடிபட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர், மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனிமவள கடத்தலை தடுத்திடும் வகையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோடம்பாக்கம்

அப்போது வாகனங்களில் போலியான “அனுமதி சீட்டு பாஸ்” இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவை அனைத்தும் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள அச்சக நிறுவனம் ஒன்றில் அச்சிடப்பட்டது தெரிந்தது.

போலீசில் புகார்

இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநரான டாக்டர் வெடியப்பன் கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அரசாங்க முத்திரையுடன் போலி அனுமதி பாஸ் தயாரிப்பில் ஈடுபட்ட அச்சக ஊழியர்களான மணிகண்டன், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான அச்சக உரிமையாளரை தேடி வருகின்றனர். இதில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து பிடிபட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT