மேட்டூர் அணை 
தமிழக செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2612 கனஅடியாக குறைந்தது

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2678 கனஅடியில் இருந்து 2612 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

நீர்வரத்து குறைவு

இந்த நிலையில் அணைக்கு நேற்று வினாடிக்கு 2678 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 2612 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது.

அணையின் நீர்மட்டம் 61.37 அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 25.71 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

SCROLL FOR NEXT