காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 3295 கனஅடி நீர் வரத்து பதிவாக, டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று அணையின் நீர்மட்டம் 60.75 அடியாக இருந்த நிலையில் இன்று 61 அடியாக உயர்ந்து காணப்பட்டது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3295 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் 25.43 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீடித்து வருவதால், அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.