தமிழகத்தில் மழை தீவிரமாக பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,586 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 56.93 அடியாக உள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரம் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றும் மேட்டூர் பகுதியில் மழை கொட்டியது. சுமார் 68.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 5 ஆயிரத்து 586 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது.
அணையின் நீர்மட்டம் 56.93 அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 22.45 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.