தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை உபரிநீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதியம் நிலவரப்படி 20 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.நாளை காலைக்குள் மேட்டூ அணை தனது முழுகொள்ளளவை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாலை மலர்

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.38 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 89.38 டிஎம்பியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. 1,21,934 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை டெல்டா பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது.

அதை படிப்படியாக உயர்த்தி இன்று காலை 11 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. மதியம் நிலவரப்படி 20 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காவி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே நிலையில் நீர்வரத்து நீடித்தால் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மேட்டூர் அணை தனது முழுகொள்ளளவை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அணையின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.