கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு ஆகியவற்றை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அமைகிறது.
அதன்படி நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,590 கன அடியாக இருந்தது. பின்னர் நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 1,582 கன அடியாக சரிந்தது. இன்றும் நீர்வரத்து அதே நிலையில் நீடித்து வருகிறது.
இன்று காலை 8 மணி அளவில் அணை நீர் மட்டம் 54.68 அடியாகவும், நீர் இருப்பு 20.88 டி.எம்.சி.ஆகவும் இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.