ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக ஸ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசும், அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் காவிரி ஓடத்துறையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மகன் குமாரசாமி ஆகியோரைக் கண்டித்தும், கர்நாடகாவின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் விவசாயிகள் மணலில் புதைந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன், பிரேம்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவ சாயிகள் கலந்துகொண்டனர்.
இது பற்றித் தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக ஸ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.