தமிழக செய்திகள்

நீண்ட ஓய்வுக்கு பிறகு பணிகளை தொடங்கினார் மேயர் பிரியா

கடந்த 6-ந்தேதி முதல் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தேர்தல் பணி முடிந்து வழக்கமான பணிக்கு திரும்பினார்.

சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா, நீண்ட ஓய்வுக்குப் பிறகு நேற்று ரிப்பன் மாளிகை வந்து அலுவல் பணியைத் தொடங்கினார்.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் நேற்றுமுன்தினம் வரை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பணிக்கு திரும்பாமல் இருந்தார். மேயர் பிரியா இதுவரை முதலமைச்சர் விஜயை சந்திக்கவும், பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவும் இல்லை.

கடந்த 6-ந்தேதி முதல் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தேர்தல் பணி முடிந்து வழக்கமான பணிக்கு திரும்பினார். ஆனால் மேயர் 20 நாட்களுக்கு பிறகு நேற்று தான் பணிக்கு திரும்பி உள்ளார். நேற்று பணிக்குத் திரும்பிய மேயர் பிரியாவை சந்தித்து சென்னை மாநகராட்சியின் 75-வது ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள சமீரன் ஐ.ஏ.எஸ் வாழ்த்துபெற்றார்.