தமிழக செய்திகள்

மழை பாதித்த இடங்களில் மேயர் பிரியா ஆய்வு

கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு மேயர் பிரியா ஆய்வு செய்தார்.

பேசின் பாலம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சி, வார்டு 169-க்கு உட்பட்ட மேற்கு சி.ஐ.டி. நகர் பகுதியில் உள்ள மாம்பலம் கால்வாய் தூர்வாரப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, நேற்றைய மழையால் தண்ணீர் சீராகச் சென்றது.

மழைநீர் வடிகால்

திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு 77, பவுடர் மில்ஸ் சாலை பேசின் பாலம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கட்டுப்பாட்டு மையம்

தொடர்ந்து ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திரு.வி.க. நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலை செங்கை சிவம் பாலம் பகுதியில், ஓட்டேரி நல்லா கால்வாயில் தண்ணீர் தங்கு தடை இன்றி செல்வதைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மண்டல அலுவலர் சதீஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT