தமிழக செய்திகள்

மயிலாடுதுறை அருகே தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டி படுகொலை

கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனதாண்டவபுரம் ரெயில்வே கேட் அருகே ஆற்காடு சாலையில் தமிழ்ச்செல்வன் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 50). அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொறுப்பாளராகவும் இருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

தி.மு.க. பிரமுகர் மாயம்

இந்த நிலையில், தமிழ்ச்செல்வன் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு பணிக்கு சென்று விட்டு, இரவு 10 மணிக்கு மீண்டும் வீடு திரும்புவது வழக்கம். அதேப்போல், நேற்று அதிகாலை பணிக்கு சென்ற தமிழ்ச்செல்வன் அன்று முழுவதும் வீட்டிற்கு போன் செய்து பேசவில்லை. மேலும், இரவு நீண்ட நேரம் ஆகியும் தமிழ்ச்செல்வன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அப்பகுதியில் தேடி பார்த்துள்ளனர்.

வெட்டி படுகொலை

அப்போது நள்ளிரவு ஆனதாண்டவபுரம் ரெயில்வே கேட் அருகே ஆற்காடு சாலையில் தமிழ்ச்செல்வன் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

போலீஸ் குவிப்பு

கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT