நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் பக்தர் பெருமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகருக்கு வழிபாடு நடத்தியும், கோவில்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நடத்தியும் வழிபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் விநாயகரை வழிபடும் மக்களுக்கு, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!
மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!
இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு, அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.