தமிழக செய்திகள்

மனைவி பிரசவத்துக்கு சென்ற நேரத்தில் இளம்பெண்ணை கடத்திய வாலிபர்

இளம்பெண்ணின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.2 பெண்களை திருமணம் செய்த பிறகும் 3-வதாக ஒரு பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்துவந்தார்.

சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இளம்பெண் பீரோவில் இருந்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி புத்தகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாயமானார். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்த னர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணுக்கு பொள்ளாச்சி கொள்ளுபாளையத்தை சேர்ந்த ஏற்கனவே 2 முறை திருமணமான 27 வயது வாலிபருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. வாலிபரின் 2-வது மனைவி பிரசவத்திற்கு அவரது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது வாலிபர் இளம்பெண்ணை அவரது வீட்டுக்கே அழைத்து சென்று உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

தற்போது 2 பேரும் மாயமாகி விட்டனர். 2 பெண்களை திருமணம் செய்த பிறகும் 3-வதாக ஒரு பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.