தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு வேல் கொடுத்த மரகதம் குமரவேல்

முதலமைச்சர் விஜய்யை காண அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமானோர் குவிந்தனர்.

மதுராந்தகம் அருகே ஆத்தூர் பகுதியில் நடைபெறும் கூட்டத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு வேட்பாளர் மரகதம் குமரவேல் வேல் பரிசளித்தார்.

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் காரில் பயணித்தார். இதனால் காலை முதலே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

குவிந்த கூட்டம்

முதலமைச்சர் விஜய்யை காண அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமானோர் குவிந்து வருகின்றனர்.

செங்கல்பட்டு, திருவள்ளூர் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர். போலீசார் பலரும் சீருடையின்றியும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

முதலமைச்சர் விஜய் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை

பொதுக்கூட்டம் வரும் வழியில் உள்ள மதுராந்தகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்த வந்த முதலமைச்சர் விஜயை, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வரவேற்றார்.

மதுராந்தகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கினார்.

விஜய் வரும் வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், மதுராந்தகம் அருகே ஆத்தூர் பகுதியில் தவெக கூட்டம் நடக்கும் திடலுக்கு முதல்வர் விஜய் வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் மரிய வில்சன், காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

வேல் கொடுத்து வரவேற்பு

தவெக கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. அதன்பின், தவெகவின் மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேலை விஜய் அறிமுகம் செய்தார். அப்போது, மதுராந்தகம் தொகுதிக்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு மரகதம் குமரவேல் வேல் கொடுத்து வரவேற்றார்.

SCROLL FOR NEXT