தமிழக செய்திகள்

பொன்னேரி-மீஞ்சூர் பகுதியில் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிப்பு: இருமல், உடல் வலியால் அவதி

வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு வெளி நோயாளிகள் வருகை அதிக அளவில் உள்ளது. வழக்கத்தைவிட காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருகின்றனர்.

பென்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பினால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் இருமல், சளி, உடல்வலியால் அவதிப்படும் நிலை உள்ளது.

காய்ச்சல்

இதையடுத்து காய்ச்சல் சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு வெளி நோயாளிகள் வருகை அதிக அளவில் உள்ளது. வழக்கத்தைவிட காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருகின்றனர்.

பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி

இதையடுத்து மீஞ்சூர், பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிகளில் சித்த மருத்துவவார்டில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் நோயாளிகளுக்கு வழங்க வைக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் பாதிப்பு குறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் அனு ரத்னா கூறும்போது, பொன்னேரி மருத்துவமனைக்கு தற்போது காய்ச்சல், சளி பாதிப்பால் அதிக நோயாளிகள் வருகின்றனர்.

மருத்துவர் ஆலோசனை

இதற்கு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக சளி இருமல் காணப்படுகிறது. தொடர்ந்து காய்ச்சல் 3 நாளைக்கு மேலாக காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது. மருத்துவரை அணுகி உடல்நிலை பாதிப்பு குறித்து சரியாக கேட்டறிந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். சுடுநீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம்.

வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இருமும்போது அருகில் இருப்பவர்களுக்கு பரவாத வண்ணம் கை குட்டையை பயன்படுத்த வேண்டும். வீட்டின் அருகில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT