தமிழக செய்திகள்

மன்னார்குடியில் சாலையோர கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கக்கோரி போராட்டம்: 3 ஆயிரம் கடைகள் அடைப்பு

கடையடைப்பு காரணமாக கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் நகர் பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.

சாலையோர கடைகளினால் ஏற்படும் போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துக்களால் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி வர்த்த்க சங்கம் சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர் பகுதியில் குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பள்ளி வளாகங்கள் அருகிலும் சாலையோரம் வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகள் மூலமாகவும் உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.

வர்த்தகர்கள் பெரும் பாதிப்பு

மேலும், சுகாதாரமற்ற முறையில் எவ்வித பாதுகாப்பு அம்சமும் இல்லாமல் செயல்படுத்தி வரும் உணவகங்கள் மற்றும் இதர உணவு பொருட்களின் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். வியாபார நிறுவனங்களின் வாசலில் தள்ளுவண்டிகள் மற்றும் பெரிய வாகனங்கள் மூலம் வியாபாரம் செய்யப்படும் உணவு பொருட்களினால் அரசுக்கு வரி வருவாய் செலுத்தி வரும் வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இன்று கடையடைப்பு

எனவே, சாலையோர கடைகளினால் ஏற்படும் போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துக்களால் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி வர்த்த்க சங்கம் சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

கடைவீதி வெறிச்சோடியது

அதன்படி, இன்று மன்னார்குடி நகர் பகுதி முழுவதும் உள்ள சுமார் 3 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சிரமம் அடைந்தனர். கடையடைப்பு காரணமாக கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் நகர் பகுதியே வெறிச்சோடி காணப்பட்ட

SCROLL FOR NEXT