மாணிக்கம் தாகூர் 
தமிழக செய்திகள்

தமிழக கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்- மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டின் உரிமைகளையும், இந்திய அரசியலமைப்பையும் அடகுவைத்து பா.ஜ.க. அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும் எவரும் வரலாற்றுப் பிழையிலிருந்து தப்பிக்கவே முடியாது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் அநீதி, துரோகம். எனவே, அப்படிப்பட்ட கட்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வரவேற்கிறேன்

மக்களவை உறுப்பினர்களின் தற்போதுள்ள எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும். இந்த தொகுதிகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, முதலமைச்சர் கொண்டு வந்துள்ள, அரசின் தனித்தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட ‘தொகுதி மறுவரையறை மசோதா”வை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் கொண்டு வர ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு வருகிறது.

அநீதி

ஒட்டுமொத்தத்தில், தொகுதி மறுவரையறை சட்ட மசோதா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்து விடும். மாநில சுயாட்சி, ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய நம் இந்திய அரசியலமைப்பின் உயரிய நோக்கங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் அநீதி, துரோகம். எனவே, அப்படிப்பட்ட கட்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டின் உரிமைகளையும், இந்திய அரசியலமைப்பையும் அடகுவைத்து பா.ஜ.க. அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும் எவரும் வரலாற்றுப் பிழையிலிருந்து தப்பிக்கவே முடியாது. தமிழ்நாட்டின் குரலாய், மக்களாட்சியின் காவலனாய் நாம் இறுதிவரை களத்தில் நிற்போம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT