தமிழக செய்திகள்

தமிழக கல்வி உரிமையில் தலையிடுவதா? - கவர்னர் அர்லேகருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

நீட், இந்தி திணிப்பு, இப்போது என்.இ.பி. என பா.ஜ.க.வும் அதன் கவர்னர்களும் தொடர்ந்து தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் கவர்னர் மூக்கை நுழைக்க வேண்டாம்.

தேசிய கல்விக் கொள்கை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல், பாஜகவின் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை திணிக்க கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. முன்பு ஆர்.என்.ரவி அரசுக்கு எதிராக செயல்பட்டதை போல, இப்போது புதிய கவர்னரும் போல் தன் மூலம் அதே வேலையைத் தொடர்கிறார்.

ஆய்வுக் கூட்டம்

மதுரை சர்க்யூட் ஹவுஸில் அதிகாரிகளை அழைத்து ‘ஆய்வுக் கூட்டம்’ நடத்த முயன்றது, இப்போது கல்வித் கொள்கையை திணிக்கப் பார்ப்பது என கவர்னர்களின் அத்து மீறல்கள் தொடர்கின்றன.

நீட், இந்தி திணிப்பு, இப்போது என்.இ.பி. என பா.ஜ.க.வும் அதன் கவர்னர்களும் தொடர்ந்து தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.

எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை தமிழ்நாடு அரசே தீர்மானிக்கும், டெல்லி அல்ல.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.