தமிழக செய்திகள்

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து வைத்து உள்ளனர்.

வெண்புருஷம், கொக்கில மேடு, தேவநேரி, பட்டிப்புலம், சூலேரிக்காடு, நெம்மேலி, புது கல்பாக்கம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

வங்ககடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

ஏற்கனவே வருகிற 16-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவித்து உள்ளது.

மீனவர்கள்

இதனால் மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கில மேடு, தேவநேரி, பட்டிப்புலம், சூலேரிக்காடு, நெம்மேலி, புது கல்பாக்கம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து வைத்து உள்ளனர்.

மாமல்லபுரத்தில் இன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது.

SCROLL FOR NEXT