தமிழக செய்திகள்

மாமல்லபுரத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம்

தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வீடுகள் உருவாகிய நிலையில், கழிவுநீர் வடிகால் குழாய்கள் சேதமடைந்து காலி இடத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

மாமல்லபுரம் அண்ணாநகர், சூளைமேடு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள வீட்டுமனை பிரிவு வழியாக, கல்பாக்கம் சாலை பக்கிங்காம் கால்வாயில் போய் சேரும் விதமாக, சிமெண்ட் குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

கழிவுநீர்

தற்போது அங்கு பல்வேறு கட்டுமானங்கள், வீடுகள் உருவாகிய நிலையில், கழிவுநீர் வடிகால் குழாய்கள் சேதமடைந்து காலி இடத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகள் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SCROLL FOR NEXT