தமிழக செய்திகள்

கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து

மல்லிகார்ஜூன கார்கே அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மதிப்பிற்குரிய மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT