தமிழக செய்திகள்

CM Vijay | முதலமைச்சர் விஜய்யுடன் உரையாடிய மலேசிய பிரதமர்

வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாட்டுக்கு வருகை தருவேன் என்று அவரிடம் நான் தெரிவித்தேன்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேற்று (மே 22) தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார்.

இந்த உரையாடலில், வருகிற செப்டம்பர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதாகவும், வாய்ப்பு கிடைத்தால் தமிழ நாட்டுக்கும் வருகை தருவதாகவும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இன்று எனது நண்பர் முதல்வர் விஜய்யுடன் உரையாடி சமீபத்திய விவரங்களை பகிர்ந்துக்கொண்டேன். தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் ஏற்றுள்ள இந்த பெரும் பொறுப்புக்காக மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டேன்.

இத்துடன், வரும் செப்டம்பர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை மேற்கொள்ள இந்தியா செல்வது குறித்தும், வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாட்டுக்கு வருகை தருவேன் எனவும் அவரிடம் நான் தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.