தமிழக செய்திகள்

நீலம் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’!

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிப்பில், மணிகண்டன் நடிக்கும் புதியப் படத்திற்கு மக்கள் காவலன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் குமார் எழுதி, இயக்கும் இப்படத்திற்கு நிவாஷ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் எனும் வசனம் அதில் இடம்பெற்றுள்ளது.

படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT