தமிழக செய்திகள்

மகா கும்பமேளா: சென்னை-பிரயாக்ராஜ் விமான கட்டணம் ரூ.59 ஆயிரம் வரை அதிகரிப்பு

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது. திரிவேணி சங்கமத்தில் நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சென்னை:

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் 3 நதிகள் சேரும் திரிவேணி சங்கமத்தில் நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களிலும் கட்டணம் எகிறி உள்ளது. அமாவாசை திதி நாளை வரும் நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து பிரயாக்ராஜ் செல்ல விமான கட்டணம் ரூ.59 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT