தமிழ்நாட்டின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கையில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. மதுராந்தகத்தில் 282 வாக்குகளுடன் தவெக முன்னிலையில் உள்ளதோடு, தாராபுரத்தில் 1237 வாக்குகளுடன் முன்னிலை தொடர்கிறது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் மதுராந்தகம் தொகுதியில் தவெக 660 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து, அதிமுக 375, திமுக 335, நாம் தமிழர் கட்சி 39, மார்க்சிஸ்ட் 19 வாக்குகள் பெற்றுள்ளன.
தாராபுரம் தொகுதியில் தவெக 1237 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. திமுக 632, அதிமுக- 524, சிபிஐ-6, நாம் தமிழர் கட்சி 3 வாக்குகள் பெற்றுள்ளன.
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.