தமிழக செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்: 2-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் த.வெ.க. முன்னிலை

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் த.வெ.க. முன்னிலை வகித்தது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 2-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலை பெற்றுள்ளது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க இடையே இரண்டாம் இடத்திற்கான கடும் போட்டி நிலவுகிறது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் த.வெ.க. முன்னிலை வகித்தது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டது. 2-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் த.வெ.க. முன்னிலை வகிக்கிறது.

மதுராந்தகம் தொகுதி

5061 வாக்குகள் பெற்று தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது. அதனை தொடர்ந்து, 3710 வாக்குகள் பெற்று தி.மு.க. இரண்டாம் இடமும், 2903 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. மூன்றாம் இடமும் வகிக்கின்றன. நாம் தமிழர் கட்சி 39, சிபிம் 19 வாக்குகளும் பெற்றுள்ளன.

தாராபுரம் தொகுதி

6189 வாக்குகள் பெற்று தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது. அதனை தொடர்ந்து, 4053 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. இரண்டாம் இடமும், 3078 வாக்குகள் பெற்று தி.மு.க. மூன்றாம் இடமும் வகிக்கின்றன. நாம் தமிழர் கட்சி 64, சிபிம் 23 வாக்குகளும் பெற்றுள்ளன.

இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாம் இடத்திற்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT